வடலூரில் இன்னொரு கீழடியா? சத்திய ஞான சபையில் கீழே இருப்பது என்ன? தோண்டிய அதிகாரிகளுக்கு சர்ப்ரைஸ்

Update: 2024-04-25 13:44 GMT

வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கான அஸ்திவாரம் தோண்டும் பணிகள் முன்னதாக நடைபெற்றது. அப்போது, சத்திய ஞான சபைக்கு நிலம் கொடுத்த பார்வதிபுரம் கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால், கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததால் இப்பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இதில், அஸ்திவாரத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பழங்கால கட்டிட படிமங்கள் மற்றும் பழங்கால சுவர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே, சம்பந்தப்பட்ட் இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அதன்படி, ஆராய்ச்சி மேற்கொள்ளும் பட்சத்தில், கீழடி போன்று பல தகவல்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்