கழிவுநீர் கால்வாயை மிரட்டி மூட வைத்த 2 போதை ஆசாமிகள் - கரூரில் பரபரப்பு

Update: 2024-05-24 08:30 GMT

கரூர் கிருஷ்ணராயபுரத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி செய்த பொக்லைன் ஆபரேட்டரை மிரட்டி பேரூராட்சி கழிவுநீர் கால்வாயை மண்ணைக் கொண்டு மூட வைத்த போதை ஆசாமிகளால் பரபரப்பு ஏற்பட்டது... மஞ்சமேட்டில் விவசாய பாசன வாய்க்கால் பராமரிப்புப் பணியில் இருந்த பொக்லைன் ஆபரேட்டரை மிரட்டிய 2 போதை ஆசாமிகள், பேரூராட்சி கழிவுநீர் பாசன வாய்க்காலில் கலப்பதால் தான் ஆகாயத்தாமரை மற்றும் மண் அதிக அளவு படிந்து உள்ளதாக கூறி கழிவுநீர் கால்வாயை மண்ணைக் கொண்டு மூட வைத்துள்ளனர். இதையறிந்த பேரூராட்சித் தலைவர் சேதுமணி, செயல் அலுவலர் யுவராணி ஆகியோர் மண்ணால் மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய் அடைப்பை தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு அகற்றினர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கையால் மண் மற்றும் கழிவுகளை அகற்றியது நெஞ்சைப் பதைபதைக்க வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்