M.R.விஜயபாஸ்கரோடு கைதான இளைஞருக்கு நடு ரோட்டில் நடந்த அதிர்ச்சி - பரபரப்பு CCTV காட்சி

Update: 2024-08-17 03:37 GMT

கரூர் நிலமோசடி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கையெழுத்திட்டுவிட்டு சென்ற இளைஞர் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில், அவருடன் சேர்ந்து பிரவீண் என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டார். தற்போது, நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், கரூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கையெழுத்திட்டு வருகிறார். வழக்கம் போல கையெழுத்திட்டுவிட்டு புறப்பட்ட பிரவீண், ரெட்டிப்பாளையம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, அவரை மற்றொரு காரில் பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல், பிரவீண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் திரண்டதால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. காயமடைந்த பிரவீண், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்