முகமூடி நபர்கள் செய்த பகீர் காரியம்..அபாய நிலையில் பிரபல தொழிலதிபர்

Update: 2024-07-19 05:36 GMT

குமரி மாவட்டம் வீயனூர் அருகே பிரபல தொழிலதிபரை வீடு புகுந்து தாக்கி 200 சவரன் நகையை கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் வீயனூர் பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபரான மோகன்தாசின் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், மோகன்தாசியின் தலையில் இரும்பு கம்பியால் அடித்து தாக்கியுள்ளனர். மேலும் அவரது இளைய மகளான அக்ஷயாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டுக்குள் இருந்த 200 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மோகன்தாஸ் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் கொள்ளை நடந்த பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாததால் திருடர்களை கண்டுபிடிப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்