கபடியில் பகை.. ஒரு வருடம் கழித்து பழி தீர்த்த கும்பல்.. மிரளவிடும் சிசிடிவி காட்சி

Update: 2024-09-09 08:37 GMT

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே 3 பேர் சேர்ந்து இளைஞர் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஒராண்டுக்கு முன் நடைபெற்ற கபடி போட்டியில் கனகப்பபுரம் பகுதியை சேர்ந்த பிரேம் ஆனந்த் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஜெகன், சுதர்சன், ஜெனிதன் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. இந்த நிலையில், பிரேம் ஆனந்த் பூந்தொட்டி வாங்குவதற்காக நர்சரி கார்டனுக்கு சென்றபோது அவரை ஜெகன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஜெகனை கைது தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். தற்போது இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்