புது பைக் வாங்கி வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியிலே தெரிந்த நிஜ ரூபம்..

Update: 2024-08-06 04:33 GMT

புது பைக் வாங்கி வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியிலே தெரிந்த நிஜ ரூபம்..ஓடி ஒளிந்துகொண்ட ஷோரூம் ஊழியர்கள் - வாசலிலே கதறும் ஓனர்

ஷோ ரூமிலிருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே மின்சார இருசக்கர வாகனம் பழுதானதுடன், ஒரே வாரத்தில் முழுமையாக செயலிழந்து, வாடிக்கையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் உள்ள எலெக்ட்ரிக் இருசக்கர வாகன ஷோரூமில், கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த பாபு ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் செலுத்தி வாகன புக் செய்துள்ளார். 20 நாட்களுக்கு பின் அவருக்கு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதனை ஷோரூமிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்லும் போது, வழியிலேயே பழுதாகி நின்றுள்ளது. தகவலறிந்து வந்த ஷோ ரூம் ஊழியர்கள், தற்காலிகமாக அதனை சரி செய்து கொடுத்துள்ளனர். எனினும், ஒரே வாரத்தில் அந்த வாகனம் முழுமையாக செயலிழந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, சரக்கு வாகனத்தில்​ அதனை ஏற்றி வந்த பாபு, ஷோரூமில் ஒப்படைத்து, சரி செய்து தருமாறு கோரியுள்ளார். ஆனால், 10 நாட்களை கடந்து, அதனை சரி செய்து தராமல் பாபுவை அலைகழித்துள்ளனர். இதனையடுத்து ஷோரூக்கு வந்த பாபு, அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். எனினும், ஷோரூம் ஊழியர்கள் உரிய பதிலளிக்காமல் ஓடி ஒளிந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்