லாரி டிரைவரை அரிவாளுடன் மிரட்டிய ரவுடி.. வெளியான பகீர் வீடியோ

Update: 2024-10-26 02:54 GMT

லாரி டிரைவரை அரிவாளுடன் மிரட்டிய ரவுடி.. வெளியான பகீர் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் பகுதியில், லாரி ஓட்டுநரை, அரிவாளுடன் ரவுடி மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து லாரி ஓட்டுனரின் புகார் மீது விசாரணை மேற்கொண்ட போலீசார், அரிவாள் கொண்டு மிரட்டிய நபர், குமாரபுரத்தை சார்ந்த பிரபல ரவுடி சுந்தர் என்பது தெரியவந்தது. இவர் மீது கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் தலைமறைவான ரவுடி சுந்தரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்