தாயைத் தாக்கிய தம்பியை கொலை செய்த அண்ணன் கைது குமரியில் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தாய் சுப்புலட்சுமி மற்றும் தம்பி சுந்தர் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் சுபாஷூக்கு திருமணமான நிலையில் அவரது மனைவியும் அதே வீட்டில் வசித்து வந்து இருக்கிறார். கூலி வேலை செய்து வரும் சுந்தர் மதுவுக்கு அடிமையான நிலையில் அடிக்கடி தாயுடன் தகராறில் ஈடுபட்டு வந்து இருக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று தாயைத் தம்பி சுந்தர் கட்டையால் தாக்கியதால் படுகாயம் அடைந்து இருக்கிறார். இதனைத் தடுக்க வந்த சுபாஷை சுந்தர் கத்தியால் குத்த முயன்று இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் தம்பியிடம் இருந்த கத்தியைப் பறித்து அவரை குத்தியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி சுந்தர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சுபாஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.