மது போதையில் பைக் ரேஸ் - இளைஞர்கள் அட்டகாசம் - குமரியில் பரபரப்பு

Update: 2024-08-19 02:04 GMT

குமரி மாவட்டம் களியல் - நெட்டா சாலையில், மது போதையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது. விடுமுறையில் இயற்கை அழகை ரசிக்க, இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் சிலர், சாலையை மறித்து நின்றுக்கொண்டு வீடியோ எடுத்தனர். பின்னர், பிரேக் பிடித்துக்கொண்டே இருசக்கர வாகனங்களை இயக்கி ரேஸ் சென்றனர். இது போன்று செயல்படும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்