தென்னக வெள்ள பாதிப்பு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Update: 2023-12-20 07:01 GMT

மத்தியக் குழுவினர் தூத்துக்குடியில் இன்று ஆய்வு செய்ய உள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின், நாளை ஆய்வு மேற்கொள்கிறார் என்றும், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இன்று, தூத்துக்குடிக்குச் செல்வதாக முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், மத்தியக் குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளதால், மாவட்ட நிர்வாகம் அவர்களுடன் இருக்க வேண்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையைக் கருத்தில்கொண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்