நெல்லையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.
தொடர் கனமழை காரணமாக நெல்லை டூ மதுரை சாலையில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில், கைப்பிடி சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு பாலத்தின் மீதுள்ள ராட்சத குழாய்கள், 3 வீடுகள் ஆகியவையும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இவற்றை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.