"வெறும் மண்ண போட்டா ரோடு ஆகிடுமா?" தட்டிக்கேட்டவரை மிரட்டிய ஒப்பந்ததாரர் வைரல் வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பேரூராட்சியில், தரமற்ற சாலைகள் போடப்படுவதாக கூறி, ஒப்பந்ததாரருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கல்லங்குழி கிராம பகுதியில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பீட்டர் என்பவர் மேற்கொண்டு வரும் நிலையில், சாலைகள் தரமற்ற முறையில் போடப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், சம்பவத்தன்று மேர்பார்வைக்கு வந்த பீட்டரிடம், அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.