நண்பனின் மனைவியுடன் உல்லாசம்... கணவனுக்கு பாடை கட்டிய கள்ளக்காதல்

Update: 2024-06-18 11:28 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் பனையூரில் வசித்து வந்த தம்பதி ரவி - மணிமேகலை. கட்டட மேஸ்திரியாக ரவி வேலை பார்த்து வந்த நிலையில், அவரது நண்பன் மணிகண்டனுடன் மணிமேகலைக்கு பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறி இருக்கிறது. இதனை அறிந்த ரவி மனைவியை எச்சரித்ததுடன், மணிகண்டனிடமும் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் முன்விரோதத்தில் இருந்த மணிகண்டன், தன் சகோதருடன் சேர்ந்து ரவியை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனின் சகோதரர் கோபியை கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்