இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (26-06-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-26 16:03 GMT

பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர், மரபுப்படி சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து மகிழ்ச்சி...

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றம்...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்திக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று வாழ்த்து...

18வது மக்களவையின் சபாநாகராக ஓம் பிர்லா இன்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், அரசியல் கட்சி சார்பற்று, நடுநிலையோடு செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதனிடையே, துணை சபாநாயகர் யார்

என்ற கேள்வி எழுந்துள்ளது?.... செய்தியாளர் ரமேஷ்குமார் வழங்கிய தகவல்கள் இவை..மருத்துவ சிகிச்சைக்காக பண உதவி கோரிய நடிகர் வெங்கல் ராவுக்கு, நடிகர் சிம்பு நிதியுதவி...


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உட்பட 3 பேர் இன்று ஒரேநாளில் உயிரிழந்ததை அடுத்து, விஷச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. விவரங்களுடன் இணைகின்றனர் செய்தியாளர்கள் அரவிந்தன் மற்றும் எழில்குமார்...


அரவிந்த், விஷச்சாரயம் குடித்தவர்களில் இன்னும் எத்தனை பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்? அவர்களது உடல்நிலை எப்படி உள்ளது? கூடுதல் விவரங்கள சொல்லுங்க.

Tags:    

மேலும் செய்திகள்