சென்னையின் 2வது ஏர்போர்ட் - 786வது நாளாக இரவு பகலாய் போராடும் மக்கள்

Update: 2024-09-19 02:32 GMT

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 786 ஆவது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய விமான நிலையமாக பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்புகளை மத்திய அரசு மாநில அரசு வெளியிட்டு, நிலம் கையகப்படுத்துதல் உள்பட பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில், பசுமைவெளி விமான நிலையம் அமைக்கஎதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வரும் ஏகனாபுரம் கிராம மக்கள், நேற்றும் 786 வது நாளாக விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய மாநில அரசுகள், விவசாய நிலங்கள், நீர் நிலைகள், குடியிருப்புகள் உள்ளிட்டவைகளை அழித்து பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், விவசாயத்தையும், விவசாயிகளை காத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்