கல்வராயன்மலை கிராமங்களில் வழக்கறிஞர் தமிழ்மணி ஆய்வு | Kalvarayan Hills

Update: 2024-07-14 03:05 GMT

கல்வராயன் மலையில் எந்த வசதியும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணியிடம் பொதுமக்கள் வேதனைகளை தெரிவித்தனர்.

உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உள்ள மேல்பாச்சேரி, சின்ன திருப்பதி, கொட்டபுத்தூர், வெள்ளிமலை, புதூர், எழுத்தூர் உள்ளிட்ட கிராமங்களில், மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, வீடியோவாக பதிவு செய்தார். அப்போது, மலைவாழ்மக்கள் அடுக்கடுக்கான குறைகளை தெரிவித்தனர். சாலை வசதிகள் இல்லை, மருத்துவ வசதிகள் இல்லை, பட்டா இல்லை என தங்களது பிரச்சினைகளை கூறினர். இவற்றை பதிவுசெய்துகொண்ட வழக்கறிஞர் தமிழ்மணி, அவர்களின் கோரிக்கைகள், தற்போதைய நிலை உள்ளிட்ட அனைத்தையும், அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்