"எங்கே..? எங்கே..?" - காலையே குழம்பிய சென்னை வாசிகள்

Update: 2024-10-29 08:49 GMT

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான புறநகர் ரயில்சேவை இன்று மீண்டும் துவங்கியுள்ளது. சென்னை கடற்கரை -எழும்பூர் இடையே மேற்கொள்ளப்பட்டு வந்த நான்காவது வழித்தட பணிகள் காரணமாக, கடற்கரை வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி இடையே மட்டும் இயக்கப்பட்டது. இந்த நிலையில், நான்காவது வழித்தட பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பறக்கும் ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் 14 மாதங்களுக்கு பின், சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான ரயில்சேவை இன்று காலை முதல் இயக்கப்பட்டு வருகிறது. இருமார்க்கமும் 90 ரயில்சேவை இயக்கப்படும் என்றும், பூங்கா ரயில் நிலையத்தில் மட்டும் ரயில் நிற்காது என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரயில்சேவை தொடங்கப்பட்ட பின்பும், சென்ட்ரலில் இருந்து வரும் ரயில் பயணிகள் மீண்டும் சிந்தாதிரிப்பேட்டை சென்று வரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்