சொத்தில் பங்கு தர மறுத்த தந்தையை கொன்ற மகன்.. கள்ளக்குறிச்சியில் பயங்கர சம்பவம்.!

Update: 2024-08-03 03:35 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே, சொத்து தகராறில் தந்தையை மகன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மண்மலை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. 53 வயது விவசாயியான இவருக்கு, பாண்டிதுரை மற்றும் விஜய் என இரு மகன்கள் உள்ளனர். இதில், திருமணமான பாண்டிதுரைக்கும், மாரிமுத்துவிற்கும் இடையே சொத்தை பாகப்பிரிவினை செய்வதில் பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. மற்றொரு மகனான விஜய்க்கு திருமணமாகும் வரை சொத்தை பிரித்து தர முடியாது என மாரிமுத்து பிடிவாதமாக இருந்திருக்கிறார். இதனால், ஆத்திரத்தில் இருந்த பாண்டிதுரை தந்தையை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தில், மாரிமுத்துவின் மகன் பாண்டிதுரையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்