சென்னை திருவேற்காடு அடுத்த நூம்பலில் கேஏஜி டைல்ஸ் நிறுவனம் சார்பில் 1 லட்ச சதுரடி பரப்பில் பிரம்மாண்ட கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது... ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறும்... நிர்வாக இயக்குனர் பாலாஜி, இயக்குனர் ஹரி, துணைத்தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சியைத் துவக்கி வைத்து பல்வேறு வகையிலான டைல்ஸ்களைப் பார்வையிட்டனர்...
இந்த கண்காட்சியில் மொத்தம் 2 ஆயிரத்து 500 வகையான டைல்ஸ்கள் இடம்பெற்றுள்ளன. குறைந்த செலவில் பொதுமக்கள் டைல்ஸ்களை வாங்கிச் செல்ல கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக கேஏஜி டைல்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.