இறந்த பின்னும் உயிர் வாழும் நபர்.. அரசு மரியாதையுடன் மண்ணுக்குள் சென்ற உடல்

Update: 2024-06-26 08:44 GMT

கடையநல்லூரில் விபத்தில் மூளைச்சாவடைந்து உயிரிழந்த‌தால், உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட கூலித் தொழிலாளியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். 47 வயது கூலித் தொழிலாளியான இவர், கடந்த 23ம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது ஆட்டோ மோதி தலையில் பலத்த காயமடைந்தார். நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கல்யாணசுந்தரம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, உறவினர்களின் விருப்ப‌ப்படி கல்யாண சுந்தரத்தின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதையடுத்து, உயிரிழந்த கல்யாணசுந்தரத்தின் உடல் கடையநல்லூருக்கு கொண்டு வந்த போது, அரசு சார்பில் தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் சங்கரை பிடித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்