வெளியூரில் இருந்து வந்து எப்படி சாலையில் கடைவிரித்து பாசிமணி வியாபாரம் செய்யலாம் என ஆவேசம் ..
ரவுடி பேபியாக வளம் வந்த நரிக்குற பெண் அசுவினி சக நரிக்குற பெண்ணை கத்தியால் தாக்கி காயப்படுத்தியதாக கொலை முயற்சி வழக்கில் கைது செய்து மாமல்லபும் போலீசார் நடவடிககை!
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குற குடியிருப்பை சேர்ந்தவர் அஸ்வினி(வயது35), இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் அன்னதானம் சாப்பிட வந்து அவமானம் செய்யப்பட்டதாக சமூக வலை தளங்களில் அவர் குமுறல் வெளிப்படுத்தியதை அடுத்து, முதல்வர் ஸ்டாலின் அந்த பெண் வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் அப்பெண்ணுக்கு பாசிமணி விற்க மாமல்லபுரம் கடற்கரை சாலையில் பங்க் கடை ஒதுக்கியும் ஏற்பாடு செய்தார். இதையடுத்து முதல்வர் முதல் அமைச்சர்கள், அதிகாரிகள் பெயரை வைத்து கடற்கரை சாலையில் மற்ற வியாபாரிகளுக்கு இடையூராக சாலையில் கடைவிரித்து வியாபாரம் செய்தார். அதனை தட்டி கேட்ட சக வியாபாரிகளை மிரட்டுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மாமல்லபுரம் கடற்கரை சாலையில் திருக்கழுக்குன்றம் கொத்திமங்கலம் பகுதியை சேர்ந்த நரிக்குறவ பெண் நதியா(வயது37) என்பவர் சாலையில் கடை விரித்து பாசிமணி வியாபாரம் செய்துள்ளார். அபபெண்ணிடம் சென்று தகராறு செய்த அஸ்வினி கொத்திமங்கலத்தில் (வெளியூரில்) இருந்து வந்து இங்கு எப்படி நீ பாசிமணி வியாபாரம் செய்யலாம் என்று கூறி தகராறு செய்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து அஸ்வினி, நதியாவை தான் வைத்திருந்த பேனா கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது கழுத்து, முதுகு, வயிற்றில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து ஏற்கனவே வியாபாரிகளை மிரட்டியதாக புகார் உள்ள நிலையில், சக நரிக்குற பெண்ணை கத்தியால் தாக்கியதாக அஸ்வினியை கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்..