"வாக்காளர் பட்டியலில் குளறுபடி" - முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். திமுக, அதிமுக, பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக தெரிவித்தனர்.