``சென்னை, மும்பை என எல்லா இடங்களிலும் பலாத்காரம்'' சிறை சென்றும் அடங்காத `ரஞ்சிதமே' ஜானி மாஸ்டர்

Update: 2024-09-16 09:23 GMT

இளம் நடனக்கலைஞர் அளித்த பாலியல் புகாரின்பேரில், ஜானி மாஸ்டருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற 'ஹலமதி ஹபிபோ', வாரிசு படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே' உள்ளிட்ட பாடல்களுக்கு கொரியோகிராஃபி செய்தவர் டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷா.. இவருக்கு எதிராக இளம் நடனக் கலைஞர் அளித்த பாலியல் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜானி மாஸ்டர் குழுவில், பெண் நடனக் கலைஞராக இருந்த பாதிக்கப்பட்ட பெண், தற்போது தனியாக நடன இயக்குநராக செயல்பட்டு வருகிறார். 21 வயதான அவர், ஜானி மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஹைதராபாத், சென்னை, மும்பை என ஷூட்டிங் சென்ற இடங்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராய்துர்காம் காவல் நிலையத்தில் ஜானி மாஸ்டருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு நடனக் கலைஞர் சதீஷ் என்பவர் அளித்த பாலியல் புகார் காரணமாக, 6 மாதங்கள் ஜானி மாஸ்டர் சிறைவாசம் அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்