சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவரான இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தினர். இதில் கிடைத்த தகவலின் பேரில், பிரபல கட்டுமான நிறுவனமான பி.எஸ்.கே குழுமத்திற்கு தொடர்புடைய இடங்களில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏற்கனவே, கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலின்போது நடத்தப்பட்ட சோதனையில், பி.எஸ்.கே குழுமம் 112 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என தகவல் வெளியானது. இந்த பி.எஸ்.கே குழுமம் தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய அரசு கட்டுமானங்களுக்கு ஒப்பந்தம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.