தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது.
கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து, பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இதே போன்று, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நகரப்பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான தெற்கு பாளையம், கரைப்புதூர், அவரப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது.
மேலும், சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் ஆடிப் பட்டத்திற்கு தேவையான மழை நீர் கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.