பாரிவேந்தர் கட்சி ஆபிஸில் துருவி துருவி தேடிய IT அதிகாரிகள்.. கடும் வாக்குவாதம்

Update: 2024-04-18 02:46 GMT

#parivendhar #itraind

திருச்சி மாவட்டம், முசிறியில் ஐஜேகே கட்சி அலுவலகம் மற்றும் அதன் அருகேயுள்ள தனியார் விடுதியில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்...

vovt

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியின் சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரது கட்சியின் தேர்தல் அலுவலகம் முசிறியில் அமைந்துள்ளது. மேலும், அதற்கு அருகேயுள்ள விடுதியிலும் கட்சி நிர்வாகிகள் அறைகள் எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில், கட்சியின் தேர்தல் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் தங்கியிருந்த விடுதி அறைகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பணம் எதுவும் கிடைக்காத நிலையில், தங்களை தேர்தல் பணியாற்ற விடாமல் அதிகாரிகள் தடுப்பதாகக் கூறி கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்