வரலாறு காணாத உச்சம்... ஒரேநாளில் `சூரியன்' இல்லாமல்... மிரளவைத்த இந்தியா..!

Update: 2024-05-31 12:48 GMT

இந்திய மின் துறையின் குறிப்பிடத்தக்க சாதனையாக நாடு நேற்று 250 ஜிகாவாட் என்ற அதிகபட்ச மின் தேவையை பூர்த்தி செய்துள்ளது. மேலும், மே 29 அன்று நாடு முழுவதும் சூரியன் அல்லாத மின் தேவை 234.3 ஜிகாவாட்டை எட்டியுள்ளது. இது பருவநிலை தொடர்பான தாக்கம் மற்றும் இந்த பகுதிகளில் வளர்ந்து வரும் தொழில்துறை மற்றும் குடியிருப்பு மின் நுகர்வு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.

மேலும் மே 30 அன்று, வடக்குப் பகுதியில் 86.7 ஜிகாவாட் என்ற வரலாறு காணாத அளவை எட்டிய நிலையில் மேற்கு பகுதிகள் 74.8 ஜிகாவாட்டை எட்டியது. கூடுதலாக, அனைத்திந்திய அனல்மின் உற்பத்தி எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. குறிப்பாக சூரிய ஒளி இல்லாத நேரங்களில் 176 ஜிகா வாட் உச்சத்தை எட்டியது.

சூரிய ஒளி கிடைக்கும் நேரங்களில் சூரிய மின் உற்பத்தி, சூரிய ஒளி அல்லாத நேரங்களில் காற்றாலை மின் உற்பத்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்