"நீ கொடி ஏத்துமா எவன் வந்து தடுக்குறானு பாக்குறேன்" -அரணாக காத்து நின்ற போலீஸ்..ஏற்றிய ஊராட்சி தலைவி

Update: 2023-08-16 04:38 GMT

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே, பட்டியலின பெண் ஊராட்சி மன்றத்தலைவர், போலீஸ் பாதுகாப்புடன் தேசியக்கொடி ஏற்றினார்.

பழையூரை சேர்ந்த பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவர் வித்யா, சுதந்திர தின விழாவில் கொடியேற்ற விடாமல் சிலர் தகராறு செய்யப்போவதாக தகவல் வந்துள்ளதாக, மதுரை மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு அளித்தார். இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, பழையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்த வித்யா, போலீஸ் பாதுகாப்புடன், தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். அங்கிருந்தவர்களுக்கு வித்யா, இனிப்புகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து பழையூர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் எவ்வித சலசலப்பும் இன்றி 20 நிமிடங்களில் அமைதியாக நடந்து முடிந்தது. சமுதாய கூடத்தின் முன்பு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வித்யா மற்றும் கிராம மக்கள் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்