"சிறை செல்ல மாட்டேன்.." கத்தியைக் காட்டி ரகளை செய்த நபர் - மகளிர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

Update: 2023-08-09 06:17 GMT

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில், பிரியா என்பவரை மறுமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இதனிடையே, இவர் மீது காஞ்சனா என்பவர் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் 2021ம் ஆண்டு பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நீண்ட நாட்களாக ஆஜராகாமல் இருந்த நிலையில், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து, அவர் மனைவியுடன் நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது காவல்துறையினர் அவரை கைது செய்ய இருப்பதை அறிந்து, மனைவியின் கைப்பையில் இருந்த கத்தியை எடுத்து, "சிறை செல்ல மாட்டேன்" எனக் கூறி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பானது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்