அடங்காத இளைஞன்.. அடம்பிடித்த மனைவி.. கள்ளக்காதலனை கடத்திய கணவன்.. தட்டி தூக்கிய போலீஸ்..!

Update: 2024-08-31 04:26 GMT

நத்தக்காடையூர் அருகே உள்ள புதுசக்கர பாளையத்தை சேர்ந்தவர் கவுரி சங்கர். 28 வயதான இவருக்கும், திருமணமான மற்றொரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அந்த பெண்ணின் கணவரான மகேந்திரன் கண்டித்துள்ளார். அதன்பிறகும் பழக்கம் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கவுரி சங்கரை மகேந்திரன் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் தாக்கி, காரில் கடத்தி சென்றது. கவுரி சங்கரை மீட்க அவரது உறவினர்கள் மற்றொரு காரில் துரத்தினர். இதனால் அச்சமடைந்த மகேந்திரன் குழு, கவுரி சங்கரை பாதி வழியிலேயே இறக்கிவிட்டு சென்றது. இதுகுறித்த வழக்கில் மகேந்திரன், அவரது தம்பி மூர்த்தி மற்றும் திலீப் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய மேலும் 3 பேருக்கு போலீசார் வலைவீசி உள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்