சாதாரண குடும்ப பிரச்சனை.. கணவன் கோபத்தில் எடுத்த விபரீத முடிவு..! தென்காசியில் பரபரப்பு
தென்காசி மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரின் கணவர் தற்கொலை செய்துகொண்டார். செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகிப்பவர் திருமலை செல்வி. இவரது கணவர் மோகன்ராஜ். நேற்று மாலை மோகன்ராஜ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.