"பணம் தர முடியுமா..! முடியாதா..!"மனைவி தலையை கர கரனு அறுத்த கணவன்.. கன்னியாகுமரி அருகே அதிர்ச்சி

Update: 2024-01-05 09:03 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளை அருகேயுள்ள கோயிக்கல்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு மாம்பழஞ்சியை சேர்ந்த சவுமியா என்பவருடன் 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராஜேஷ், மது அருந்த பணம் தராத ஆத்திரத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மனைவியை அரிவாள்மனையால் கழுத்தறுத்து கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ராஜேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், மறு வருடமே ராஜேஷ் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி வந்த ராஜேஷை, நீதிமன்ற உத்தரவுடன் போலீசார் தேடி வந்தனர். இதனிடையே, காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்கு வந்த ராஜேஷை, போலீசார் 3 வருடங்களுக்கு பிறகு பொறி வைத்து பிடித்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்