ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 19 ஆயிரம் கன அடியில் இருந்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. கடந்த 26 நாட்களாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை தொடர்கிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் பிலிகுண்டு காவிரி ஆற்றில், மீண்டும் வெள்ளப்பெருக்கு. தொடர் மழை மற்றும் கர்நாடக அணைகளில் நீர் திறப்பதால் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.