இஸ்லாமியரின் ஆஞ்சநேய பாசம்... பாதியில் நின்ற தந்தையின் கனவு... தடைகளை மீறி சாதித்த சகோதரர்கள்

Update: 2024-07-28 14:35 GMT

பல்வேறு தடைகளைத் தாண்டி ஆந்திர மாநிலம் சித்தூரில் இஸ்லாமிய சகோதரர்கள் ஆஞ்சநேயருக்குக் கோவில் கட்டி வருகின்றனர்...

புலிச்சரலா கிராமத்தைச் சேர்ந்த பிரோஜ், சந்த் பாஷா ஆகிய இஸ்லாமிய சகோதரர்களின் தாத்தாவிற்கு துவக்கத்தில் குழந்தை இல்லாத நிலையில், அவர் குழந்தை வரம் வேண்டி ஒரு இந்து சாமியாரிடம் வேண்டிக் கொண்டாராம்... தினமும் ஆஞ்சநேயரை விடாமல் வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என சாமியார் கூறவே அவர் சொன்னது போலவே ஆஞ்சநேயரை வழிபட்டதால் மகன் பிறந்தாராம்... அவருக்கு அம்ஜித் பாஷா என பெயரிடப்பட்ட நிலையில், மகன் அம்ஜித் பாஷாவும் ஆஞ்சநேய வழிபாட்டை மேற்கொண்டுள்ளார்.. ஆஞ்சநேயருக்கு கோவில் கட்ட முடிவு செய்த அவர்

குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் சப்த மந்திர் என்ற பெயரில் கூலி வேலை செய்து கிடைத்த பணத்தை மட்டுமே பயன்படுத்தி ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டினார்.

அவருக்கு ப்ரோஜ், சந்த்பாஷா ஆகிய 2 மகன்கள் பிறந்த நிலையில், மத ரீதியான எதிர்ப்புகளால் கோவில் பணி நின்றுபோகவே அதை முழுமையாக கட்டி முடிக்காமலேயே அம்ஜித் பாஷா இறந்து போனார். இறந்து போன தங்கள் தந்தையின் ஆசையை நிறைவேற்ற அவரது மகன்கள் சபதம் எடுத்து பல்வேறு தடைகளைத் தாண்டி கட்டுமான பணியை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் பணிகளை முடித்து மக்கள் வழிபாடு செய்ய கோவில் திறக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்