எல்லை பிரதேசத்தில் தீப்பொறி பறக்க பேசிய பிரியங்கா.. பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2024-05-28 11:55 GMT

பணபலம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பாஜக கவிழ்ப்பதாக, பிரயங்கா காந்தி சாடியுள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி ஹிமாச்சல் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய பிரியங்கா காந்தி, ஹிமாச்சல பிரதேசத்தில் மிகப்பெரிய பேரிடர் வந்த போது, காங்கிரஸ் மக்களின் பக்கம் நின்றதாகவும், பிரதமர் மோடி மக்களை பார்க்க கூட வரவில்லை என்றும் குற்றம் சுமத்தினார். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஹிமாச்சல பிரதேசம் முயற்சித்துக் கொண்டிருந்த போது, மாநில அரசை கவிழ்க்க பிரதமர் மோடி முயற்சித்ததாக குறிப்பிட்டுள்ளார். பாஜக அரசு மதத்தின் பெயரை வைத்து அரசியல் செய்வதாகவும், பணபலம் மற்றும் அதிகாரத்தைக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பாஜகவில் முயற்சி செய்வதாகவும் பிரியங்கா காந்தி தன் உரையில் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்