சென்னையில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை - வரிசை கட்டி நின்ற வாகனங்கள்
நேற்று இரவு 10 மணியளவில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படியே, சென்னையில் நேற்று இரவு அண்ணா சாலை, எழும்பூர், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.