#BREAKING || ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை.. சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு
அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என 3 ஷிப்ட் அடிப்படையில் பணி. "மொத்த பணியாளர்களில் 50 சதவீத பேர் முதல் ஷிப்டில் பணியில் இருக்க வேண்டும்". 25 சதவீத ஊழியர்கள் 2வது ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 3வது ஷிப்டிலும் பணியில் இருக்க அறிவுறுத்தல்.