சென்னை மக்களுக்கு குட் நியூஸ் .. மகிழ்ச்சியில் ரயில் பயணிகள்

Update: 2023-12-06 08:37 GMT

தாம்பரம் கடற்கரை மார்க்கமாக அரை மணி நேரத்திற்கு ஒருமுறை என சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...தொடர் மழையின் காரணமாக தண்டவாளங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இருந்ததால் தாம்பரம் கடற்கரை செல்லும் ரயில் போக்குவரத்து தடைபட்டிருந்தது. இந்நிலையில், இன்று வெள்ள நீர் படிப்படியாக குறைந்ததன் காரணமாக சோதனை முறையில் அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் என தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் கடற்கரை என அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்களானது இயக்கப்படுகின்றன... ரயில்கள் எப்பொழுதும் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அன்றாட வேலைகளுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்