பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்... - முகூர்த்த நாள் சிறப்பு சலுகை அறிவிப்பு!

Update: 2023-11-22 17:39 GMT

சுபமுகூர்த்த தினமான நாளை, சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். இதனால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி, நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால், அதிகப்படியான முன்பதிவு வில்லைகள் வழங்க வேண்டும் என்று பதிவுத்துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒரு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்படும். ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு, கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்