கண்டவுடன் சட்டென வயலில் இறங்கி ஜெர்மனி மாணவி செய்த செயல் - பார்த்து வியந்துபோன திருப்பூர்

Update: 2024-08-13 05:39 GMT

தமிழ் பாரம்பரியங்களை அறிந்து கொள்ளும் வகையில், ஜெர்மனியை சேர்ந்த பள்ளி மாணவி திருப்பூரில் தங்கியுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த மாணவி ஜெனிஃபர், ஓராண்டு காலம் இந்தியாவில் தங்கி, தமிழர்கள் உட்பட இந்தியர்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் விவசாயம் ஆகியவற்றை அறிந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். திருப்பூரில் உள்ள பள்ளியில் இணைந்துள்ள அவர், தமிழ் மொழியை பயின்று வருகிறார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் சாலையையொட்டி பெண்கள் நடவுப்பணியில் ஈடுபட்டிருந்ததை கண்டு, அவர்களுடன் இணைந்து நெல் நடவு செய்தார். மேலும், பயிர் செய்வது, அறுவடை ஆகியவை குறித்தும் அவர் அறிந்து கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்