அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்... அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது... சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்
அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். ஆந்திர கடலோரம், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், தெற்கு கடலோரம், அதை ஒட்டிய தென்மேற்கு, தென் கிழக்கு, தெற்கு, அதை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.