விடாமல் பொளந்து கட்டும் மழை..! வீட்டுக்குள் சூழ்ந்த வெள்ளம்..! களத்தில் இறங்கிய மேயர் | Tiruppur
திருப்பூர் மாநகரில் கழிவுநீருடன் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தகவல் அறிந்து வந்த மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன் குமார் ஆகியோர் மழை பாதித்த இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள், உடனடியாக மழைநீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். மாநகராட்சியில் உள்ள தாழ்வான இடங்களில் முறையான மழைநீர் வடிகால் வசதி அமைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.