மீன் வலை தொழிலாளர்களுக்கு ஷாக் கொடுத்த -மீன்வளத்துறை அதிகாரிகள்

Update: 2024-09-07 14:11 GMT

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளில், மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 22 கோடி ரூபாய் செலவில், மீன் பிடி துறைமுக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்படும் அனைத்து விசைப்படகுகளுக்கும் மாதம் 100 ரூபாய் கட்டனமும், நாட்டு படகுகளுக்கு 50 ரூபாய் கட்டணமும் விதிக்கப்பட்டுள்ளது. மீன்களை இறங்கு தளத்தில் இறக்கும் நாட்களில் மட்டும் 200 ரூபாய் கட்டணமும், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கட்டணமும் விதிக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்களுக்கு தினமும் ஐம்பது ரூபாய் கட்டணமும், கனரக வாகனங்களுக்கு நூறு ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்