பற்றியெரிந்த விளையாட்டு திடல்..9 குழந்தைகள் உள்பட 27 பேர் உடல் கருகி பலி -நிவாரணம் அறிவித்த முதல்வர்

Update: 2024-05-27 11:46 GMT

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் அமைந்துள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.

ராஜ்கோட் பகுதியில் அமைந்துள்ள டி.ஆர்.பி எனப்படும் விளையாட்டு திடலில் மாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், பெற்றோர் என பலரும் பதறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தீப் பிழம்புகள் கொழுந்து விட்டு எரிந்ததால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி போர்க்களமாக மாறியது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். அதே நேரத்தில், ஒன்பது சிறுவர்கள் உட்பட 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விபத்து குறித்த செய்தி கேட்டு துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். இதே போன்று இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பூபேந்திர படேல், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், தீ விபத்து குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்