நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம் - ஏரியாவையே நடுங்கவிட்ட பரபரப்பு சம்பவம்
நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம் - ஏரியாவையே நடுங்கவிட்ட பரபரப்பு சம்பவம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பரவாடா பகுதியில் நள்ளிரவில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் ரியாக்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டி என்ற பெயரில் செயல்பட்டு வரும் மருந்து தயாரிப்பு தொழில் பூங்காவில் Metrochem API நிறுவனம் மருந்துகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. வழக்கம்போல் நேற்று இரவு தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது 12 மணி அளவில் தொழிற்சாலையில் இருந்த ரியாக்டர் ஒன்று திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தொழிற்சாலையின் ஒரு பகுதி தீப்பற்றி எரியத் துவங்கியது. தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு படையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக விபத்தில் யாரும் பாதிப்படையவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.