"இனி மாடுகள் ரோட்டில் திரிந்தால்.." - ஏறிய ஃபைன் அமவுண்ட்

Update: 2024-02-13 02:52 GMT

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள் மூன்றாவது முறையாக பிடிபட்டால் ஏலத்தில் விடப்படும் என மதுரை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கான அபராதத்தை அதிகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி முதல்முறை அபராதம் ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து ஐந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது முறையாக பிடிபட்டால் ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல கால்நடை வளர்ப்பிற்கு கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும் எனவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆரப்பாளையம் ரவுண்டானாவில் நினைவு தூண் அமைப்பது, பழங்காநத்தத்தில் அமைக்கப்பட்ட பூங்காவிற்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்கா பெயர் வைப்பது தொடர்பாக சிறப்பு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்