பெண் தூய்மைப் பணியாளருக்கு நேர்ந்த கதி - நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

Update: 2024-03-06 08:54 GMT

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில், சாலை விபத்தில் படுகாயமடைந்த பெண் தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வசந்தி, சாலையோரம் இருந்த குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அங்கு வந்த கார் வேகமாக மோதியதில் படுகாயமடைந்தார். இதில் இரண்டு கால்கள் மற்றும் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளார். இந்நிலையில், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தங்களது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி வசந்தியின் கணவர், நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். இதனிடையே, விபத்து குறித்த செய்தியறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தததாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், வசந்தியின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்