ஃபெலோ சிட்டிசன் அமைப்பு...இலவச நீட் பயிற்சி - மருத்துவராகப்போகும் 8 மாணவர்கள்

Update: 2022-10-20 12:40 GMT

ஃபெலோ சிட்டிசன் அமைப்பு...இலவச நீட் பயிற்சி - மருத்துவராகப்போகும் 8 மாணவர்கள்

ஃபெலோ சிட்டிசன் அமைப்பின் நிதியுதவி மூலம் இலவச நீட் பயிற்சி பெற்ற மாணவர்களில் 8 பேர் மருத்துவ கல்வி படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஃபெலோ சிட்டிசன் அமைப்பு வழங்கும் நிதியுதவி மூலம் ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்கள் பெற்ற எட்டு மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

குடும்ப சூழல், பொருளாதார சிக்கல் உள்ளிட்ட பிரச்சினையில் சிக்கி தவித்த மாணவர்களின் மருத்துவர் கனவு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான ஆணையை பெற்ற மாணவர்கள், ஆற்றுப்படை அறக்கட்டளைக்கும்,ஃபெலோ சிட்டிசன் அமைப்புக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்