“அப்பா தினமும் குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிக்கிறார்..'' - போலீசில் புகாரளித்த 13 வயது சிறுவன்

Update: 2023-09-02 14:17 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முல்லை நகரை சேர்ந்த கூலித்தொழிலாளியான ஜாபர், தனது மனைவி மற்றும் 5 மகன்களுடன் வசித்து வருகிறார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜாபர், தினமும் மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. வழக்கம்போல், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ஜாபர், மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 13 வயது சிறுவன், தனது தந்தை மதுபோதையில் தினமும் தாயை துன்புறுத்துவதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்ததுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். இன்று காவல்துறை சார்பாக நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த சிறுவன், காவலர்களிடம் இதுகுறித்து தெரிவித்து தந்தையை சிறையில் அடைக்க கேட்டுள்ளார். இதுதொடர்பாக சிறுவனின் தந்தையை அழைத்து போலீசார் அறிவுரை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்