திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், நிலத்தடி நீர் முற்றிலுமாக குறைந்துள்ளது. விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரை நம்பி நெல் நடவு செய்த விவசாயிகளுக்கு கிணறுகளிலும் நீர்வற்றியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
700 ரூபாய் கொடுத்து ஒரு டிராக்டர் தண்ணீர் வாங்கி நெல் வயலுக்கு பாய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே விவசாய நிலத்திற்கு அதிகளவு முதலீடு செய்துள்ள நிலையில், தற்போது மேலும் தங்களது கடன் சுமை கூடியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.